விருதுநகரில் விஜய பிரபாகனை ஆதரித்து கனிமொழி எம்.பி பரப்புரை..

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும் விஜயகாந்த்-தின் மகனுமான விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. விஜய பிரபாகரன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.
தமிழ் மண்ணின் உரிமைகளைக் காக்க ஒன்றிணைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியால் தமிழ்நாடு உயரும் என்று பேசினார்.


தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்தி, திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்! தமிழ்நாடு சிறக்கட்டும் எனக் கூறி அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரித்தார்.


திருச்சுழி – காரியாபட்டி சாலையில் பெருந்திரளாக கூடிய மக்கள் பெரும் ஆதரவளித்து, மீண்டும் தி.மு. கழகமே ஆட்சி அமைக்கும் என்றார்.
திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என திருச்சுழி மக்களிடம் கேட்டுக் கொண்டேன்.

புதிய மாவட்டமாக காரைக்குடியை அறிவிப்போம்: பரப்புரையில் டி.டி.வி. தினகரன் பேச்சு..

Recent Posts