
‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்துக்காக 50 ஆயிரம் தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, படிவங்களில் பெயர், விவரங்களை பெற்று 10 வகையான திட்டங்களில் பயன்பெறுவது குறித்து பதிவு செய்
வார்கள். அதன்பின் 3 முத்தாய்ப்பான திட்டங்கள் (கனவுகள்) குறித்து அவர்களை குறித்து தர கேட்பார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் அதே குடும்பத்திடம், படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண், கையெழுத்து ஆகியவற்றை பெற்று பிரத்யேக செயலியில் பதிவு செய்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரத்யேகமான ‘குறியீட்டு எண்’ உருவாக்கப்படும். அந்த எண்ணை கனவுஅட்டையில் பதிவு செய்து குடும்பத்தினரிடம் அளித்து விடுவோம். மேலும்‘விஷன் டாக்குமென்ட்’ தயாரிக்க உள்ளோம். இளைய சமுதாயத்தினரிடம் 4 கனவு சார்ந்த திட்டம் குறித்து கேட்டுப் பெற உள்ளோம். ஜன.9-ல் பொன்னேரியில் முதல்வர் ஸ்டாலின், உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
