ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (டிச.9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கே 520 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 980 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, நாளை மாலை அல்லது இரவு, இலங்கை கடலோரப் பகுதிகளில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையே கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக நாளை முதல் 11-ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் நாளை திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 10-ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாள் தொகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சென்னையில் “Umagine TN 2026” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

Recent Posts