காரைக்குடியில் தொடர்ந்து 75-வது நாளாக பொதுமக்களுக்கு நீர் மோர் :தவெக நிர்வாகிகள் சாதனை…


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கழனிவாசல் ஒ.சிறுவயல் விலக்கில், காரைக்குடி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளால் கனிமவளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.கே. பிரபு அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீர் மோர்ப் பந்தல் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 75-வது நாளாக நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது வரை எந்தவொரு அரசியல் மற்றும் அமைப்புகளோ தொடர்ந்து 75 நாட்களாக பந்தல் அமைத்து நீர் மோர் கொடுத்தது இல்லை.

நீர் மோர் பொதுமக்களுக்கு 75-வது நாளாக கொடுப்பதை முன்னிட்ட சிறப்பு அழைப்பாளராக தவெக நிர்வாகியும் தொழிலதிபருமான மரிங்கிப்பட்டி இரமேஷ் கலந்து கொண்டு இத்தகைய தொண்டு செய்யும் தவெக நிர்வாகிகளைப் பாராட்டினார். மேலும் பொதுமக்களுக்கு நீர் மோருடன் இனிப்பும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான தவெக நிர்வாகிகளும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நீர் மோர் பந்தல் குறித்து நம்மிடம் பேசிய தவெக நிர்வாகி மாண்புமிகு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க தொடங்கப்பட்ட இந்த நீர் மோர் பந்தல் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றார்.
செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்

கடலுக்கு அடியில 250 மீட்டர் ஆழத்தில் ரவுண்டானா…

இளைய தலைமுறையினரிடையே வலுவான தேசப்பற்றை உருவாக்குகிறது NCC : திருச்சி NCC கர்னல் கெளரவ் சிரோஹி ..

Recent Posts