காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் ஏற்பாட்டில் இலவச சமூக நல மருத்துவ முகாம் …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச சமூக நல மருத்துவ முகாம் இன்று சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது. பொதுச் சேவையில் நீண்ட காலப் பாராம்பரியத்தைக் கொண்டுள்ள அழகப்பா கல்வி நிறுவனங்களின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முக்கிய நிகழ்வாக இம்முகாம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர்.T.K பிரபு, மாண்புமிகு நீதியரசர் மு. சொக்கலிங்கம், முன்னாள் இராமச்சந்திரா மருத்துவக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்கடர் ஜே.எஸ்.என்.மூர்த்தி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். ரவி, மருத்துவர்கள் சுகாதார நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய அழகப்பா கல்வி நிறுவனங்களின் தலைமை டாக்டர் இராமநாதன் வைரவன் அவர்கள் பேசும் போது:-

”இந்த இலவச சமூக நல மருத்துவ முகாம் என்பது ஒரு மருத்துவமனையின் கதவுகளை நோயாளிகளுக்காகத் திறப்பதுமெட்டுமல்ல அழகப்பா கல்வி நிறுவனங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகும்.
75- ஆண்டுகளுக்கு முன்னர் தொலைநோக்கு சிந்தனையுடைய கொடை வள்ளல் பத்மபூஷன் டாக்டர் ஆர்.எம். அழகப்பச் செட்டியார் அவர்கள். காரைக்குடியை தலைமுறைகள் பலனடையும் கல்வி மையமாக உருவாக்கும் கனவை கண்டார் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

தரமான மருத்துவ சேவை என்பது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.

இப்பகுதி மக்களுக்கு கருணைமிக்க, எளிதில் அணுகக்கூடிய உயர்தர மருத்துவச் சேவையை வழங்கும் அழகப்பபா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வரும் பணியில் இது முக்கிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது என்றார்.

விழாவில் கிட்&கிம் பொறியியல் கல்லுாரி தாளாளர் திரு.அய்யப்பன், தொழிலதிபர் மரிங்கிப்பட்டி இரஷே் மற்றும் தவெக காரைக்குடி நகர செயலாளர் சொக்கு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்

“மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆகலாம்” : அபிஜீத் திப்கே விமர்சனம்…

Recent Posts