
காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளியின் முப்பெரும் விழா தலைமுறைகளின் சங்கமம் உலக சாதனை நிகழ்வு நடைபெறவுள்ளது.
காரைக்குடியில் செயல்பட்டு வரும் கலைக்கோயில் நாட்டியப்பள்ளி வரும் 14.06.2026 ஞாயிறு அன்று மாலை PLP கல்யாண மஹாலில் முப்பெரும் விழா தலைமுறைகளின் சங்கமம் உலக சாதனை நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ் விழா குறித்து பேசிய கலைக்கோயில் மாணவி தேவி வீரப்பன் கூறும் போது:
சக்தி நடனப் பள்ளியில் சரளா அம்மா மூலமாக என் கலைப்பயணம் தொடங்கியது. சிங்கப்பூரில் 15 வருடங்களாக பயின்று 1996-ல் என்னுடைய அரங்கேற்றம் முடித்தேன், . தொடர்ந்து வகுப்புகள் எடுத்தேன். இப்போது ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறேன்.

தற்போது இது எங்களோட ஆசிரியர் மகள் உறவாக மாறிவுள்ளது. அடுத்தடுத்த தலைமுறைக்கு நாங்கள் இதை காண்பிப்பது சமர்ப்பணம் செய்யவோம்.
எங்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்காங்களோ, எங்களுக்கு என்ன பயிற்சி கற்றுக் கொடுத்திருக்காங்களோ, பழக்க, வழக்கங்களில் இருந்து எப்படி அணுக வேண்டும் என்பதை நாங்கள் செய்யப் போகிறோம்.
நாட்டியக் கலைங்கிறது வந்து வெறும் கத்துக்கிறது மட்டும் இல்லை, அது வந்து மனசார சமர்ப்பிக்கிறது. அந்த மாதிரியான ஒரு விஷயம் தான். அதுக்குத்தான் நாங்க எல்லாரும் வந்திருக்கோம். வர முடியாத சில பேரும் இருக்காங்க, அவங்க அதை நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ பார்க்க ஏற்பாடு செய்துள்ளோம் .
சிறப்பு விருந்தினராக எங்கள் குருவின் குரு, மகா குரு, பத்மவிபூஷன் அம்மா பத்மா சுப்ரமணியம் அவர்களை அழைத்திருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியானது கலைக்கோவில் நாட்டியப் பள்ளியின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆறு தலைமுறைகளை ஒன்றிணைத்து, ஒரு குரு சமர்ப்பண விழாவாகவும், உலக சாதனை நிகழ்வாகவும், “தலைமுறைகளின் சங்கமம்” என்னும் முறையில் இப்பெரும் விழாவாக நடத்த இருக்கிறோம். இதை கலைக்கோவில் நாட்டியப் பள்ளியின் மாணவ-மாணவிகள் சேர்ந்து நடத்த இருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஐயா அவர்களும், முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து ஐயா அவர்களும், ஆசியத் தலைவர் மனிஷ் விஷ்ணு (World Record) ஐயா அவர்களும், நமது பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஐயா அவர்களும், சாம் கன்ஸ்ட்ரக்ஷன் இயக்குனர் நாச்சிமுத்து ஐயா அவர்களும், தொழிலதிபர் பி. எல். பி. படிக்காசு ஐயா அவர்களும், திண்டுக்கல் மகரிஷி வித்யா குழும தலைவர் கோடிச்செல்வம் அவர்களும், எங்கள் குருவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
பழைய மாணவிகள், இன்றைய மாணவிகள் அனைவரும் சேர்ந்து தலைமுறைகளை இணைக்கும் விதமாக, உலக சாதனை நிகழ்வாக 340 பேர் ஒரே இடத்தில்—300 மாணவிகள் ஆடவும், 30 மாணவ-மாணவிகள் இசையும் நடத்த உள்ளனர் ஒரே மேடையில். இதை உலக சாதனையாக நிகழ்த்த இருக்கிறோம்.
இந்த விழாவிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் எங்கள் மாணவிகள் வருகை தர இருக்கிறார்கள். இதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் நல்குமாறு, இப்பொழுது கலைக்கோவில் நாட்டியப் பள்ளியின் முதல்வர் சார்பாகவும், மாணவிகள் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் வருகையை வரவேற்று, உங்களது… எங்களுடைய பதிவை பதிவு செய்கிறோம்.
15 நிமிடங்களிலேயே நீங்க அந்த குரு சமர்ப்பணம்னா என்னங்கிறதை அந்த பாட்டின் மூலமாகவும், நடனத்தின் மூலமாகவும் தெரிஞ்சுக்கலாம். அதாவது, கலைக்கோயில் நாட்டியப்பள்ளி வந்து எல்லாருக்குமானது. அதுல வந்து சீனியர், ஜூனியர்லாம் கிடையாது. ஒரு நிகழ்ச்சினு சொல்லும்போது எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் அப்படிலாம் கிடையாது. எல்லாருக்கும், சீனியர், ஜூனியருக்கு ஒரே பாட்டு, ஒரே நேரம், ஒரே பாட்டு, மிகுந்த ஈடுபாட்டோட அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து 15 நிமிடத்துக்கு ஆடிடுவாங்க. அதற்குப் பிறகு வந்து நம்முடைய சிறப்பு விருந்தினர்களுடைய உரைதான் இருக்கும்.
இந்த ஆறு தலைமுறைகள் இதுவரைக்கும் யாரும் பண்ணல. இதுதான் முதல் முயற்சி நாங்க வந்து மாஸ் ரெக்கார்டுதான் முதல்லில் கேட்டோம். 300 பேருக்கு மேல கலந்து கிட்டு அது மாஸ் ரெக்கார்டுன்னு கேட்டோம். இந்த ஆறு தலைமுறைகள் அப்படிங்கிறது இதுவரைக்கும் யாரும் பண்ணல அப்படின்னு அவங்களே சொன்னாங்க.
விஷ்வ ரெக்கார்ட்ஸ்… மனிஷ் விஷ்வ… வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்ல இருந்து வருகிறார்கள் அனைவரும் பங்கேற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார்.
செய்தி &படங்கள்
சாய்தர்மராஜ்
