2026 சட்டப்பேரவைத் தேர்தல் :தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப மனுக்களை வினியோகிக்கும் பணி இன்று (பிப்., 06) தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருப்ப மனுக்களை பெற நிர்வாகிகள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களம், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று (பிப். 6) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்களை பிப்.14 ஆம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ. 100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

திமுக இளைஞரணி மாநாட்டால்“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

Recent Posts