குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள திருவண்ணாமலை ஆதின மடத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

அவரைத் தவத்திரு பொன்னம்பல அடிகளார் வரவேற்றார். ஆதினத்தில் அமைந்துள்ள குன்றக்குடி அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை ஆதினத்திற்கு வருகை புரிந்த முதல்வருக்கு தவத்திரு பொன்னம்பல அடிகளார் செங்கோல் வழங்கி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து அடிகளாரின் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்ட முதல்வர் அடிகளாரின் நுாற்றாண்டு கல்வெட்டு மற்றும் சிறப்பு மலரை வெளியிட்டார்.


விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் மாண்புமிகு பெரியகருப்பன், மாண்புமிகு பெ.சாமிநாதன், மாண்புமிகு மெய்யநாதன், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் பொற்கொடி,சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, இந்திய கம்யூ மன்னாள் தலைவர் தமிழரசி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

விருதுநகர் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இலேசான நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்..

2026-27 ஒன்றிய பட்ஜெட் : 9-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்..

Recent Posts