10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல்..

2026-ல் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் பொதுத் தேர்வு பிப்ரவிரியிலும், 2-ஆம் பொதுத் தேர்வு மே மாதத்திலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளையும் எழுதும் மாணவர்கள் எதில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கணக்கில் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-ஆம் கட்ட பொதுத் தேர்வு கட்டாயமல்ல என்றும் மாணவர்களின் விருப்பம் பொருத்தே என்று தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும், 10 ம் வகுப்பு 2வது கட்ட பொதுத்தேர்வு கட்டாயமல்ல மாணவர்கள் விருப்பம். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

ஆக்சியம் 4 விண்வெளிப் பயணம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவுடன் வெற்றிகரமாக தொடங்கியது ..

சென்னையில் மின்சார பேருந்துகள் சேவை: ஜூன்30-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் ..

Recent Posts