
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி அவர்களை ஆதரித்து புதுவயலில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார்.

அப்போது அவர் சீமானுக்கும் காரைக்குடிக்கும் சம்பந்தம் கிடையாது, சீமானுக்கு சொந்த ஊரு காரைக்குடி இல்லை சீமானுக்கு வீடு இல்லை, ஓட்டு இல்லை, அவர் தொகுதிக்கு எப்போதாவதுதான் அதாவது கடந்த முறை திருவொற்றியூரில் நின்றார், அப்புறம் அந்த தொகுதி பக்கம் போகவில்லை, அதுபோல் அவர் தேர்தலுக்கு மட்டும்தான் வருவார்.
அதுபோல் புதுசா உரு நடிகர் கட்சி ஆரம்பிச்சியிருக்காரு அவருடைய வேட்பாளர் டாக்டர் அவர் ரீல்ஸ் டாக்டர். எளிய மனிதர் மாங்குடி, ரீல்ஸ் போடுற டாக்டருக்கு லைக் போடுங்க.. சர்வீஸ் பண்ணும் மாங்குடிக்கு ஓட்டு போடுங்க என்று பேசினார்.
இன்று காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தேவகோட்டை கோட்டாச்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் கார்த்தி சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்
