
செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும், மண்மணக்கும் வாசனையோடு தற்போது காரைக்குடி மண்ணில் பழமை மாறாத அம்சங்களோடு புதியதாக உதயமாகிறது “பிச்சம்மை மெஸ்”, வீட்டுச் சமையல் போல் அளவில்லா பந்தி முறை இலைச்சாப்பாடு.

அசைவப்பிரியர்களே… உங்களுக்கு மிகவும் பிடித்த செட்டிநாட்டு உணவு பாராம்பரியத்தில் உணவுகளை வகைவகையாக வழங்க வருகிறது பிச்சம்மை மெஸ். சுவையான மட்டன் சுக்கா,மிளகு சிக்கன்,இறால் தொக்கு, மிளகு முட்டை, மீன் வறுவல், சிக்கன் பிரியாணி(பாசுமதி), சாதம் ,மட்டன் குழம்பு, மீன் குழம்பு, இனிப்பு உள்ளிட்ட உணவுகள் அளவில்லா பத்தி முறையில் இலைச்சாப்பாடு ரூ.399- க்கு வழங்கப்படுகிறது.
இது போல் பூ கோஸ், மினி வடை,கீரை,கூட்டு,பொறியல்,சைவ பிரியாணி(பாசுமதி),சாதம்,சாம்பார், ரசம், வத்த குழம்பு, இனிப்பு உணவுகள் அளவில்லா முறையில் ரூ.100-க்கு வழங்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புடன் வரும் 22.06.25 ஞாயிறு அன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைக்கவுள்ளார்கள்

காரைக்குடி கண்ணுப்பிள்ளை தெருவில் செட்டிநாடு கட்டிடக் கலையில் உணவகம் அமைந்துள்ளது. போதிய அளவு வாகன நிறுத்த இடவசதி அமைக்கப்பட்டள்ளது. கலைநயம் கொண்ட காரைக்குடியில் அமைந்துள்ள பிச்சம்மை மெஸ் -க்கு நாமும் சென்று மனநிறைவோடு உணவருந்துவோம்.

காரைக்குடி அருகே கல்லல் நகரில் பிச்சம்மை டிரஸ்ட் சார்பில் ரூ10 -க்கு உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி &படங்கள்
சிங்தேவ்
