
காரைக்குடி தொகுதியில் தேசியஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக சார்பில் வேட்பாளராக தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் அதிமுக ஆட்சியமைந்தவுடன் காரைக்குடி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றார். மேலும் கடந்த திமுக ஆட்சியல் போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து விட்டது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடி புது மாவட்டமாகவும்,சாக்கோட்டையை வட்டமாகவும், புதுவயல் பேரூராட்சியை நகராட்சியாகவும், கோட்டையூர் ஸ்ரீராம் நகர் ரயில்வே மேம்பாலம், காரைக்குடியல் அம்மா அறிவித்த சிப்காட் கொண்டுவருவோம்,செட்டிநாட்டு பலகாரங்களை உலகளவில் சந்தைப் படுத்துவோம் என்றார்.

பதவி சுகங்களை எதிர்பாக்காமல் என்னுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் உங்கள் வேட்பாளர் தேர்போகி பாண்டிக்கு “குக்கர்” சின்னத்தில் வாக்களியுங்கள், சிவகங்கை தொகுதியல் செந்தில் நாதனுக்கும், மானாமதுரை பொன் பால கணபதிக்கும், திருப்பத்துார் திருமாறனுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று பரப்பரை மேற்கொண்டார்.
செய்தி &படங்கள்
சிங்தேவ்
