
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி போட்டியிடுகிறார். நேற்று அவர் காலையில் மாத்துார், இலுப்பக்குடி பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது கடந்த 5 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதிக்கு பல்வேறு சாதனை திட்டங்களை கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நமது தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தார்.

காரைக்குடியில் அரசு சட்ட கல்லுாரி, அரசு வேளாண்மை கல்லுாரி, தொழில்நுட்ப பூங்கா, காரைக்குடி நகரை மாநகராட்சி யாக மாற்றி கொண்டு வந்தோம், இத்திட்டங்கள் தொடர “கை” சின்னத்திற்கு வாக்களிக்க கோரினார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்
