
காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.
இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி சம்பா,குறுவை,தாளடி சாகுபடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்து, மலர் மற்றும் நெல்மணிகளை தூவினார்.

கல்லணை சுற்றுலா மாளிகையில், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து, மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீரை திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தனர்.

கல்லணை சுற்றுலா மாளிகையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதையொட்டி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வேளாண் பணிகள் குறித்து முதல்வர் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டார்.
