2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருத்தகை அவர்கள் தலைமையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு அவர்கள், திரு. திருநாவுக்கரசர் அவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், திரு. ஜே.எம். ஆரூண் அவர்கள், துணைத் தலைவர்கள் திரு. ஆ. கோபண்ணா அவர்கள், திரு. சொர்ணா சேதுராமன் அவர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் உடன் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.2,000 தரப்படும். அனைத்து நியாய விலைக் கடைகளும் புதுப்பிக்கப்பட்டு தரமான அரிசி வழங்கப்படும்.
இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும்.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், 2030ஆம் ஆண்டிற்குள் 100% நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்படும், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘டியூஷன் அக்கா’ திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

காரைக்குடியில் காங்., வேட்பாளர் மாங்குடி அனல் பறக்கும் பரப்புரை..

2026 சட்டமன்றத் தேர்தல்: கேரளாவில் 77.45%, அசாமில் 85.04%, புதுச்சேரியில் 89.83% வாக்குகள் பதிவு..

Recent Posts