அரசியலில் அனுபவம் இல்லாதவர் விஜய்: காரைக்குடி பரப்புரையில் ப.சிதம்பரம் பேச்சு..

காரைக்குடி தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி,காயாவயல், அமராவதி புதுார்,ஆறாவயல், அரியக்குடி, இலுப்பக்குடி பர்மா காலணி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர்;- நடிகர் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை, ரசிகர்கள் நிறைய இருப்பதை வரவேற்கிறேன். அதை வைத்து அரசியல் செய்ய முடியாது 10 வருடங்களாக நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பணிபுரிந்தேன் அரசியல் மற்றும் ஆட்சி செய்வது எளிதல்ல, அவர் காரைக்குடி பரப்புரையில் பேசவே இல்லை, பத்திரிக்கையாளருடன் உரையாடல் இல்லை, பொதுமக்கள் சந்திப்பு இல்லை. ஆட்சி செய்வது வேறு,

திரைப்படத்தில் நடிப்பது வேறு, திரைப்படத்தில் உள்ளது போல் ஆட்சியில் “ரீ டேக்“ செய்ய முடியாது. ஆட்சி அனுபவம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. அவர் சிறப்பாக ஆட்சி செய்கிறார். மக்கள் நல்வாழ்வு, வளர்ச்சி திட்டங்கள் தொடர மாங்குடிக்கு “கை”சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

செய்தி& படங்கள்
சிங்தேவ்

2026 சட்டமன்றத் தேர்தல்: கேரளாவில் 77.45%, அசாமில் 85.04%, புதுச்சேரியில் 89.83% வாக்குகள் பதிவு..

புதிய மாவட்டமாக காரைக்குடியை அறிவிப்போம்: பரப்புரையில் டி.டி.வி. தினகரன் பேச்சு..

Recent Posts