
அகில இந்திய அளவில் குடிமைப்பணிகளான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வாக்கான UPSC CSE 2024 தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட்டது இந்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம்.
இதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 மாணவர்களில் 50 பேர் UPSC தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தில் முழுநேர பயிற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர் சிவச்சந்திரன் UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 23வது இடமும், மாணவி மோனிகா 39வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.