
காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவன் பிரகதீஸ்ராம் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர் மாஸ்டர் பிரகதீஸ்வராம், கோயமுத்துார் அவனி பப்ளிக் பள்ளியில் ஆகஸ்ட்-26 முதல் 30 வரை நடைபெற்ற 11 வயதிற்குட்பட்டோருக்கான வடக்கு மண்டல(North Zone) ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று (300 mtrs In-line) தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதன் தொடர்ச்சியாக தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று நவம்பர்-13 முதல் ‘ஹரியான-குருகிராம் — குளோபல் HSV பள்ளியில் நடைபெற்ற 11 வயதிற்குட்பட்டோருக்கான சிபிஎஸ்சி(CBSE) தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். SGFI- தேசிய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார். (SGFI-இந்தியாவின் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு).

இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற மாணவன் பிரகதீஸ்ராமுக்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் திரு. Sp. குமரேசன் அவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். பள்ளியின் துணை தாளாளர் திரு. K . அருண்குமார் அவர்களும் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். பள்ளியின் முதல்வர் திருமதி உஷாகுமாரி, துணை முதல்வ ர் திருமதி பிரேம சித்ரா மற்றும் ஆசிரியர்களும் தமது வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்
செய்தி& படங்கள்
சிங்தேவ்
