நெல்லை ஆயன் குளம் அதியக்கிணறு…

திருநெல்வேலி(நெல்லை) மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசயக் கிணறு, விநாடிக்குச் சுமார் 2,831 லிட்டர் (100 கன அடி) தண்ணீரை உள்வாங்கும் அபார திறன் கொண்டிருக்கிறது. அதனாலேயே இதனை ‘அதிசயக் கிணறு’ என அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் இந்தக் கிணறு நிரம்பாமல் உள்வாங்கிக் கொண்டே இருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஏன் இப்படி இருக்கிறது.. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதையும் பார்ப்போம்.

திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசயக் கிணறுக்கு கருமேனியாறு கால்வாயில் 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்குச் சுமார் 2,831 லிட்டர் வரும் நிலையில், அந்த தண்ணீரை அப்படியே கிணறு தற்போது உள்வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு பருவமழைக் காலங்களில், இந்தக் கிணற்றுக்குள் விநாடிக்கு 3,000 கன அடி (சுமார் 84,930 லிட்டர்) உபரி நீர் பல நாட்கள் திறந்து விடப்பட்டது. இவ்வளவு நீரை உள்வாங்கியும் கிணறு நிரம்பாமலேயே இருந்தது.

இந்த அதிசயக் கிணறு அதிகப்படியான நீரை உள்வாங்குவதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பெருகுகிறது என்பது ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தக் கிணறு வெறும் அதிசயம் என்று மட்டும் கூறி ஒதுக்கிவிட முடியாது.. இதனை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிய வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு, அப்போதைய கலெக்டர் விஷ்ணு ஆகியோர் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்களின் குழுவை கொண்டு விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், கிணற்றுக்குள் முழுமையாக சுண்ணாம்பு பாறைகள் அமைந்துள்ளதும், அதனால் பூமிக்கடியில் 5 கி.மீ., பரப்பளவில் அந்த கிணற்றிலிருந்து நீரோட்ட கால்வாய்கள் உருவாகியுள்ளதும் கண்டறியப்பட்டது.

கிணறுகளுக்கு அடியில் சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக உள்ளன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன், இந்தக் சுண்ணாம்புப் பாறைகளுடன் வேதிவினை புரிகிறது. இதன் விளைவாக, பாறைகளில் மெதுவாகச் சிறிய துவாரங்கள் உருவாகின்றன. இந்தத் துவாரங்கள் காலப்போக்கில் பெரிதாகி, பூமிக்கடியில் பெரிய குகைகளாக மாறியுள்ளன. இந்தக் குகைகள் தான் அதிக அளவு தண்ணீரைச் சேமித்து வைத்து, நிரப்பாமல் உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.

நிலத்தடி நீர்க் கால்வாய் அமைப்பு சில கிணறுகளுக்கு அடியில், பூமியில் இயற்கையான கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேபோல் உபரி நீர் இந்தக் கால்வாய்கள் வழியாகத் தொடர்ந்து செல்லச் செல்ல, நீரோட்டத்தின் அழுத்தம் காரணமாக இந்தக் கால்வாய்கள் மேலும் விரிவான நீரோட்டம் செல்லும் பாதைகளாக மாறி உள்ளதையும் ஐஐடி பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 60 கன அடி நீரை உள்வாங்கி, நிலத்தடி நீர் மட்டங்களுக்கு விரைவாக அனுப்புவதாக பேராசிரியர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்.

இவ்வாறு அந்த கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீரை உயர்த்தி, கோடை காலங்களிலும் அந்த பகுதியை வளமாக்கியது.

எனவே, தமிழக அரசு, நீர்வளத்துறை மூலம் அதிசய கிணற்றுக்கு தனி கால்வாய் மற்றும் ஷட்டர் அமைத்து, சுற்றுப்புறங்களை கான்கிரீட் சுவரால் வலுப்படுத்தி பராமரித்தது.
தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் மூலம் ஆயன்குளம் படுகைக்கு வரும் தண்ணீர், அதிசயக் கிணற்றுக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை: கனிமொழி எம்.பி தலைமையில் தயாரிப்பு குழு அமைப்பு..

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் :அமைச்சர் சிவசங்கர் ..

Recent Posts