
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி மகாராஜா நிறுவனம் சார்பில் நடைபெற்றது.

இந்த உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வில் ஏராளமான பொதுமக்கள், தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.

பொதுமக்களிடையே சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பேரணி காரைக்குடி நகரின் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

உலக சுகாதார பேரணியை காரைக்குடி குளோபல் மருத்துவமனை மருத்துவர் குமரேசன் மற்றும் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் கீர்த்தி ஸ்வஸ்திகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சுகாதார பேரணியைத் தொடங்கி வைத்து குளோபல் மருத்துவமனை மருத்தவர் குமரேசன் பேசும் போது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெரும் ஈப்பேரணி மக்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும், அன்றாடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அவசியம். நோய்கள் வந்த பின் மருத்துவம் பார்ப்பதை விட நோய்கள் வராமல் தடுப்பதே சிறந்தது. மனநலம் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டாலே நோய்கள் நம்மை அண்டாது என்றார்.

வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் கீர்த்தி ஸ்வஸ்வதிகா பேசும் போது. கண்களை பாதுகாப்பது மிக அவசியம், கண்களை வருடம் ஒருமுறையாவது சோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு பேரணி மக்களிடையே சுகாதாரத்தை வலியுருத்தும் நிகழ்வாகவே அமையும் என்றார்.

செய்தி& படங்கள்
சிங் தேவ்
