
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மருங்கி பட்டி ரமேஷ் இன்று காரைக்குடி தமிழக வெற்றி கழகம் வேட்பாளரும், சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர் பிரபு முன்னிலையில் சுமார் 2000க்கும் மேலான நபர்களுடன் இணைந்தார்.

இந்த இணைந்த நிகழ்வில் உஞ்சனை அம்பலம் ராமசாமி, திட்டம் கல்லூரி தாளாளர் ஐயப்பன், குணா பாண்டி, நகர செயலாளர் குள. சொக்கு ஆகியோர் உடன் இருந்தனர்.

தவெக-வில் இணைந்த மருங்கிப்பட்டி ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது உட்கட்சி ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாதவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை எப்படி கரை சேர்ப்பார்கள்.

சமூக சேவையில் அடையாளமாக திகழும் டாக்டர் பிரபுவை காரைக்குடி தொகுதியில் வெற்றி வாகை சூட வைப்போம் என்றார்.

செய்தி படங்கள்
சிங் தேவ்
