
கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு சுமார் 11 லட்சம் குரூப் 4 தேர்வை எழுதியிருந்தனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
குருப்-4 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டன. இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசையை அறிந்து கொள்ளலாம்.
அடுத்த கட்டமாக ஆன்லைன் சான்றிதழ் சரி பார்ப்புக்கு அனுமதிக்கப்படும் தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
