திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
“இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி மறைவை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகின்றேன். ஏழை எளிய மக்களுக்காக போராடிய போராளியை நாம் இழந்திருக்கின்றோம்.
தன் மக்களுக்காக எழுத்தின் மூலம் போராடியவரின் பேனா தற்போது ஓய்ந்திருக்கின்றது. அவரை பலமுறை உரையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது. அப்போதெல்லாம் நான் புதிய விஷயங்கள் பலவற்றை கற்றுக்கொண்டேன்.
அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதைவிட்டு மறையாத தலைவர் கலைஞர். அவரின் பிரிவால் வாடும் இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கள்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிடுள்ளார்.
