
2025 ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற்று வருகிறது. இந்த 14வது போட்டி, ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்துகிறது.
போட்டித் தேதிகள்: நவம்பர் 28 தொடங்கி டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.
தற்பொழுது 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் போட்டியாகும்.
இப்போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் இப்போட்டிக்கென தமிழ்நாடு அரசு 44.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
