வைரமுத்து எழுதிய “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்..

சென்னை, காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட முதல் பிரதியை முன்னாள் மத்தி நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
உலக மக்கள் எல்லோருக்கு புது வழியை, நல் வழியை செல்லக் கூடிய உலக இலக்கியமாக திருக்குறள் உயர்ந்து நிற்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான நூல் என கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் வே. இறையன்பு, பேராசிரியர் பர்வீன் சுல்தான மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

“நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி…

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்…

Recent Posts