
சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற Umagine TN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, விழாப் பேருரையாற்றினார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் “Umagine TN 2026” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், தமிழ்நாடு ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனக் கொள்கை 2025-26யை (Tamil Nadu Deep Tech Startup Policy 2025-26) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் “Umagine TN 2026” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், EROS Gen Al, Better Compute Works Inc, Phantom Digital Effects Limited, Rewin Health, Cube84, WeLoadin Studio LLP ஆகிய நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
