
2013 முதல்20 22 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்புகளை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 21% பிறப்பு குறைந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக இமாச்சலப் பிரதேசத்தில் 24 சதவீதம் குறைந்துள்ளது.
சிக்கிம் கோவா போன்ற இடங்களிலும் அதிகம் குறைந்துள்ளது ஆனால் அவைகள் மிகச் சிறிய மாநிலங்கள்.
ஆனால் உத்திரபிரதேசத்தில் 40 சதவிகிதம், உத்தரகாண்டில் 89 சதவிகிதம் பீகாரில் 92 சதவிகிதம் மற்றும் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் பிறப்பு விகிதம் வலுவாக அதிகரித்திருக்கிறது. இவைகள் கௌ பெல்ட் எனப்படும் பாரதிய ஜனதா கட்சியின் கோர் ஆதரவு பகுதிகள்.
இங்கெல்லாம் மக்கள் தொகை வெகு வேகமாக அதிகரிக்கிறது தென்னிந்தியாவில் ஆந்திரா தெலுங்கானா பரவாயில்லை ஆனால் தமிழ்நாடு மிக மோசமான குழந்தை பிறப்பு விகிதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதே போல போனால் இன்னும் 30 ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு Politically insignificant state ஆகிவிடும். எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் பிரிக்கப்படாமல் டி லிமிட்டேஷன் ஆனது தமிழ்நாட்டிற்கு பழையபடி 7.13 சதவிகித அளவிற்கான தொகுதிகளை இந்திய ஒன்றியத்தில் கொடுக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் போராட வேண்டும்.
