
தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று UYEGP (Unemployed Youth Employment Generation Programme) ஆகும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சிறு தொழில் அல்லது வணிகம் தொடங்க நிதி உதவி வழங்குவது இதன் நோக்கம். இந்தத் திட்டம் தொழில்துறை துறையின் கீழ் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் தங்களது சொந்த தொழிலை ஆரம்பித்து, தன்னிறைவு அடைய வழிவகை செய்யப்படுகிறது.
♦️திட்டத்தின் நோக்கம்:
UYEGP திட்டத்தின் பிரதான நோக்கம்:
- வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்குதல்
- தொழில், வணிகம், சேவை துறைகளில் புதிய முயற்சிகளை ஊக்குவித்தல்
- கிராம மற்றும் நகர்புற இளைஞர்களுக்கு நிதி ஆதரவு வழங்குதல்
🔹யார் விண்ணப்பிக்கலாம்?
UYEGP திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில தகுதிகள் அவசியம்:
- வயது வரம்பு:
✔️ பொது பிரிவு: 18 முதல் 45 வயது வரை
✔️ SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவுகள்: 18 முதல் 55 வயது வரை - கல்வித்தகுதி:
✔️ குறைந்தது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - விண்ணப்பதாரர்:
✔️ தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்
✔️ அரசு அல்லது தனியார் நிரந்தர வேலை இல்லாதவர் - முன்னதாக அரசு நிதி உதவித் திட்டங்களில் பயன் பெறக்கூடாது (எ.கா. PMEGP, NEEDS)
♦️UYEGP திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி:
✔️ உற்பத்தி துறை என்றால் அதிகபட்ச திட்ட செலவு ₹10 லட்சம் வரை எனில் அரசு மானியம் 25% (அதிகபட்சம் ₹2.5 லட்சம்) விண்ணப்பதாரின் பங்கீடு 10% உடன் 65% வங்கி கடன்
✔️ வணிகத்துறை என்றால் அதிகபட்ச திட்ட செலவு ₹3 லட்சம் வரை எனில் அரசு மானியம் 25% (அதிகபட்சம் ₹75,000) வரையும் விண்ணப்பதாதரில் பங்கீடு 10% உடன் வங்கிக்கடன் 65% தொழில் தொடங்க அரசு திட்டம்.
♦️விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளம்:
👉 https://msmeonline.tn.gov.in/index.php
இங்கே “UYEGP Online Application” என்ற பகுதியைத் திறக்கவும். - புதிய விண்ணப்பம் உருவாக்குதல்:
- உங்கள் பெயர், முகவரி, கல்வி விவரங்கள், தொழில் திட்ட விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.
- தொழில் பயிற்சி (EDP Training):
- விண்ணப்பித்த பின், தொழில் மேம்பாட்டு பயிற்சி (Entrepreneurship Development Programme) பெற வேண்டும்.
- வங்கிக்கு அனுப்புதல்:
- பயிற்சி முடிந்த பின், விண்ணப்பம் தொடர்புடைய வங்கிக்கு அனுப்பப்படும். வங்கி கடன் வழங்கி, திட்டத்தை அங்கீகரிக்கும்.
- திட்டம் நடைமுறைப்படுத்தல்:
- கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட பின், தொழிலை ஆரம்பிக்கலாம்.
♦️தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- கல்வித் தகுதி சான்று
- முகவரி சான்று
- புகைப்படம்
- வங்கிக் கணக்கு நகல்
- தொழில் திட்ட அறிக்கை (Project Report)
♦️திட்டத்தின் நன்மைகள்:
- வட்டியில்லா மானியம்
- அரசின் வழிகாட்டுதலுடன் தொழில் தொடங்கும் வாய்ப்பு
- நிதி நிறுவனங்களின் ஆதரவு
- வேலை வாய்ப்பு உருவாக்கம்
UYEGP திட்டம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும். அரசு வழங்கும் நிதி உதவியைப் பயன்படுத்தி, தொழில் முனைவோராக வளர்ந்தால், தன்னிறைவு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
