
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் குறித்து தமிழ்நாடு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார்.
பீகாரில் வருகிற 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள “ஓட்டல் அகாரவில் நடைபெற்றது.
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்காமல், மக்களை வஞ்சிக்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதோடு பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்தும் நிவாரணம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை வழங்காமல் ஓரவஞ்சனை காட்டி வருகிறது.
இதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், பாஜக திருந்தவில்லை. இந்த சூழலில்SIR என்று சொல்லப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம், பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில் நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம்.
இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படி, லட்ச கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிப்பதாகவும், அதில் ஒரு சிலரின் தந்தை பெயர், ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் என்று ஆங்கில Alphabetical-ல் இருந்து எழுத்துகளை பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தும் என்ற பெயரில் போலியாக பலரையும் சேர்த்ததோடு, இருப்பவர்களையும் நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த முறைகேட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வந்தார். எனினும் இந்த முறைகேடு குறித்து தேர்தல் ஆணையம் முறையாக பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. பாஜகவுக்கு வழக்கம்போல் சோம்பு தூக்கும் அதிமுக, இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
