பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்…

பழம் பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87-ஆம் வயதில் உடல் நலக்குறைவால் பெங்களுருவில் காலாமானார். 200 படங்களுக்கு மேல் நடித்தவர் இயற்பெயர் ராதா தேவி.

பத்மஸ்ரீ,பத்மபூசண் விருதுகளைப் பெற்றவர். 1955 -லில் மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் எம்ஜிஆருடன் நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். 60-70 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

கன்னடத்துப் பயிங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அவர் கடைசியாக நடித்த படம் ஆதவன்.

எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகியோருடன் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்த அந்நாளைய இளைஞர்களின் கனவுக்கன்னி சரோஜாதேவி அவர்கள் காலமானார்.

எம்ஜிஆர் சரோஜாதேவி இணைந்து இருபதற்கும் மேலான வெற்றி படங்கள் தொடர்ந்து கொடுத்திருக்கிறார்கள். சிவாஜி கணேசன் சரோஜாதேவி ஜோடியும் 20க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து இருக்கிறார்கள்.

கல்யாணப்பரிசு திரைப்படத்தில் அம்மா நான் காலேஜுக்கு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லும் வசனம் அந்தக் கால காதலர்களின் சிக்னல். புதிய பறவை திரைப்படத்தில் சிவாஜி, எத்தனையோ வேடங்களில் என்னை ஏமாற்றி இருக்கலாமே என்னை ஏமாற்ற இந்த புனிதமான காதலி வேடம் தானா உனக்கு கிடைத்தது என்று கேட்க சரோஜாதேவி கோபால் கோபால் என்று பேசுவது எத்தனையோ கோபால்களின் மனதில் பாலை வார்த்தது.

எம்ஜிஆர் அவர்கள் காதல் தோல்வி அடைந்தவராக நடிப்பது மிக மிக அரிது. ஆனால் அன்பே வா படத்தில் மட்டும் ஒரு வசனம் சரோஜாதேவி காதலை நிராகரித்த உடன் பேசுவதாக இருக்கும்.

இதற்கு முன் நான் அடைந்த வெற்றிகள் எல்லாம் இந்த ஒரே தோல்வியில் அர்த்தமற்றதாகி போய்விட்டது கீதா.. என்கிற வசனமும் அந்தப் படத்தில் பாலு பாலு என்று சரோஜாதேவி கிளி போல பேசுவதும் மறக்க முடியாதது.

எத்தனையோ கோபால்கள் பாஸ்கர்கள் பாலுக்கள் தங்களைத்தான் இந்த கன்னடத்துப் பைங்கிளி அழைத்ததாகவே மனம் உருகி போயிருந்தார்கள் அந்த காலத்தில். முன்னணி நடிகர்களுடன் மட்டும் 60 ககும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர்.

சரோஜாதேவி ஒரு படத்தில் இருத்தாலே அது வெற்றிப்படம் என்னும் அளவிற்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்.

வைரமுத்து எழுதிய “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்..

தமிழ்நாட்டில் நாளை கன மழைக்கு வாய்ப்பு :11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

Recent Posts