மாநிலங்களவையில் கமலின் கன்னிப்பேச்சு: இணையத்தில் வைரல்..

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் இன்று (04-02-26) பேசினார். அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் எம்பியாக பதவியேற்ற பின்பு மாநிலங்களவையில் இன்று தனது முதல் பேச்சை பதிவு செய்துள்ளார். தன்னுடைய உரையில் எங்கள் மொழிக்கு எதிராக எந்தவிதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும், அதனை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அறிஞர் அண்ணா கற்று தந்துள்ளதாக பேசியுள்ளார்.

“சினிமா என்னும் வழியில் இருந்து தான் வந்துள்ளேன். நான் தமிழ்நாட்டின் பரமக்குடி எனும் சிறிய ஊரில் இருந்து புறப்பட்டு வந்தவன். மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு இந்தியா. இந்திய அரசியல் சாசனத்தை அதுதான் வகுத்துக் கொடுத்திருக்கிறது.
எனது ஆசிரியர்கள் வாயிலாக என்னுடைய மொழியை நான் கற்றேன். அந்த ஆசிரியர்களில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஒருவர். அவர் எங்களுடைய மொழிக்கு எதிராக எப்படிப்பட்ட்ட ஆக்கிரமிப்புகள் வந்தாலும், அதனை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்வதற்கு சொல்லி தந்துள்ளார்.

1967 ஆம் ஆண்டில் வழிகாட்டியாக இருந்து என கருத்து உருவாக்கம் அமைய துணையாக இருந்தார். அண்ணா எனது வழிகாட்டிய மையம் என்ற கொள்கையை வைத்துள்ளேன்.

தமிழனாக எனக்கு பட்ஜெட்டில் சில கருத்துக்கள் உள்ளது. காந்தி நான் இந்த உரையை கோபம் இல்லாமல் பேசுவதற்கு கற்று தந்துள்ளார். தந்தை பெரியார் புள்ளி விபரங்களுடன் பேசுவதற்கு கற்று தந்துள்ளார். இந்த பெரும் அவையை புரிந்து கொள்வதற்கு அண்ணா துணையாக உள்ளார். நான் இன்றைய சுதந்திரத்தை அனுபவிக்கவும், இந்த மாபெரும் கட்டடிடம் உருவாவதற்கும் அவர்கள் போராடினார்கள். நம்மில் பலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்க மாட்டோம்.

உங்கள் முன்பாக நிற்கக்கூடிய நான் காந்தி, பெரியார் எனும் பேராசான்களின் பேரனும் மாமனிதனான அண்ணாவின் மகனும் ஆவான். இந்திய தேர்தல் ஆணையத்துடைய பிழைகளை பொறுத்துக் கொள்ள முடியாது.

எஸ்ஐஆர் எனப்படும் நோய் பீகாரில் துவங்கி நடு முழுவதும் பரவுவதை ஏற்க இயலாது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக தான் என்னுடைய சகோதரி மம்தா பானர்ஜி போராடி கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

‘தமிழன் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான், இனி, நிதி கேட்டு செல்லும் நீங்கள் இந்தியில் பிச்சை எடுக்கலாமே’ மாநிலங்களவையில் முழங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

மேலும், நான் கடவுளை நோக்கி கை கூப்ப போவது கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே என்னுடைய பகுத்தறிவு மூளை கடவுள் என்பதை அப்புறப்படுத்தியது. வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழ்க நலமுடன். இவ்வாறு அதிரடியாக தனது முதல் உரையை ஆற்றியுள்ளார் கமல் ஹாசன். அதோடு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தன்னுடைய பேச்சில் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு..

பாராளுமன்றத்தில் பிரதமரை தாக்க திட்டம் :சபாநாயகர் குற்றச்சாட்டு..

Recent Posts