
நவராத்திரி விழா முடிவில் சரசுவதி பூசையும் சேர்த்துக் கொண்டாடப்படும். கல்விக்கான கடவுள் என்று குறிப்பிட்டு மக்கள் சரசுவதியைக் கும்பிடுவார்கள். எல்லா வழிபாடுகளிலும் முதன்மையான பங்கு வகிப்பவர்கள் பெண்கள்.
கல்விக்கடவுள் பெண். எனவே கல்வியைக் கற்பித்தலில், பெண்களுக்கு முன்னுரிமை தந்து, அவர்களின் சமூக மேம்பாட்டிற்குத் துணை நிற்க வேண்டியவர் சரசுவதி.
ஆண்களுக்கும் கல்வி என்றாலும், பெண் கடவுள் கல்விக்குத் தலைமை ஏற்பதால், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது நியாயமே என்று எண்ணுவது இயல்புதானே… ஆனால் வரலாறு நமக்குத் தரும் உண்மை என்ன?
1881ல்
இந்தியர்களின் எழுத்தறிவு 4.32%.
ஆண்கள் மட்டும் 8.10%.
பெண்கள் வெறும் 0.35%.
2011ல்
இந்தியர்களின் எழுத்தறிவு 74.04 %
ஆண்கள் 82.14 %
பெண்கள் 65.46%.
அதாவது கல்விக்கடவுளாக பெண்ணே இருக்கும் நாட்டில் 1881 வரை ஒரு விழுக்காடு பெண்கள் கூடப் படிக்க வில்லை.
ஒட்டுமொத்தமாகப் படித்தவர்களே 4.32% தான்
இவற்றையெல்லாம் கல்விக்கடவுள் சரசுவதி ஆய்வு செய்து சீர் செய்தாரா என்றால் இல்லை.
ஆனால் இப்போதோ எழுபது, எண்பது, அறுபது என்ற நிலை.
இதற்குக் காரணம் யார்?
Lord Thomas Babington Macaulay
WhatsApp வந்த காலத்தில்
அவர் நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகம்.
இந்தியாவின் பாரம்பரியக் கல்வி முறையைச் சிதைத்து, வெள்ளைக்காரனுக்குப் பியூன், குமாஸ்தா வேலைகளைச் செய்ய ஆங்கிலத்தைக் கற்பித்த கயவன் என்று தான் பல Forward Messages சுற்றின.
யாரிந்த மெக்காலே என்ற தேடலும் அங்கிருந்து தொடங்கியது தான்.
Macaulay இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அந்தக் காலத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்.
இந்தியாவிற்கு வந்தபோதும் அதே செக்யூலரிசத்தை இங்கும் பரப்பியவர்.
அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேதப் பாடசாலைகள்
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்துவ மிஷினரி
தந்தால் மட்டுமே உண்டு.
இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பித்தவை. “இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது, பொது மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது” என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய்மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொதுக் கல்வியை இந்தியாவின் கல்வித் திட்டமாகக் கொண்டு வந்தவர் மெக்காலே.
♦ கல்வி ஆங்கிலேயர்களால் பரவலாக்கப்பட்ட பிறகே….
♦ அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டப் பிறகே….
♦ கல்வி நிலையங்கள் அவரவர் இருப்பிடம் அருகில் அமைந்த பிறகே…..
இந்தியர்கள் படித்தார்கள்.
இதற்கு அடுத்து அவர் எடுத்த நடவடிக்கைகள் இன்னும் சிறப்பானவை.
அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுஸ்மிருதி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்குமான “இந்தியன் பீனல் கோடு” என்று மாற்றி IPC யைக் கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்காலே தான்.
அந்த Lord Macaulay அவர்களின் பிறந்தநாள் இன்று.
அவர் திருமணம் ஆகாதவர். அவருக்கு Genetic சந்ததியினர் இல்லை.
நாம எல்லாரும், குறிப்பாக இந்தியப் பெண்கள் அவருடைய Memetic வாரிசுகள்!
மெக்கலே பிறந்த தினம் இன்று
நண்பரின் எக்ஸ் தளப் பதிவு..
