காதலர் தினம் … இதுவல்லவோ காதல்..

பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் மட்டும் காதலுக்கு அடையாளமாக திகழவில்லை அந்நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவியான பிரிகிடி ஆகிய இருவரும் ஒரு ஆழமான காதலுக்கு அடையாளமாக திகழ்கிறார்கள்.
இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது மிகவும் சுவாரசியமானது. இதை பிரிகிடி பக்கமிருந்து அதே சுவாரசியத்துடன் பார்க்கலாம்.
1954-ல் பிறந்த பிரிகிடியின் குடும்பம் செல்வாக்கு மிக்கது. நாடக இலக்கியம் பயின்ற அவருக்கு 21 வயதானபோது, ஒரு வங்கி அதிகாரியுடன் திருமணம் நடந்தது.
பிரிகிடிக்கு இத்திருமணம் நடந்தபோது இம்மானுவேல் மேக்ரான் பிறக்கவே இல்லை.
பிரிகிடிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் என 3 குழந்தைகள் பிறக்கின்றனர்.
வருடங்கள் ஓடின.
பிரிகிடி ஒரு பள்ளியில் நாடக ஆசிரியையாக சேர்ந்தார். இவரது மாணவியாக இவரது மகளான லாரன்சும் இருந்துள்ளார். இதே வகுப்பில் ஒரு மாணவராக சேர்ந்தவர் தான் இம்மானுவேல் மேக்ரான். அப்போது, அவருக்கு வயது 15. பிரிகிடிக்கு வயது 39. அதாவது, 24 வயது வித்தியாசம்.
பிரிகிடியும், மேக்ரானும் நாடகம், இலக்கியம் சார்ந்து பல விஷயங்களை பகிர்ந்தனர். இருவருக்கும் இடையே intellectual relationship அதிகரித்தது.
மேக்ரானுக்கு 17 வயதானபோது, 41 வயதான பிரிகிடியை propose செய்துள்ளார். ஆசிரியை, ஏற்கனவே திருமணம் ஆகி 3 பிள்ளைகளுக்கு தாயான பிரிகிடி தயக்கம் காட்டியுள்ளார். எனினும், ஒரு நிலையில் மேக்ரானின் காதலை பிரிகிடி ஏற்றுக் கொண்டார்.
இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர, எதிர்ப்புகள் கிளம்பின. மேக்ரானை அப்பள்ளியை விட்டு நிறுத்திய அவரது பெற்றோர் வெகுதூரம் பாரீஸில் உள்ள பள்ளியில் சேர்த்தனர்.
பள்ளியை விட்டு செல்லும்போது, ‘நீ எங்கே இருந்தாலும், என்ன செய்துக் கொண்டு இருந்தாலும், நான் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன். ஒருநாள், நான் திரும்ப வந்து உன்னை நிச்சயம் திருமணம் செய்வேன்’ என உறுதி அளித்துவிட்டு மேக்ரான் பிரிகிடியை விட்டு பிரிந்து சென்றார்.
சில ஆண்டுகள் உடலளவில் பிரிந்திருந்தாலும் கூட கடிதங்கள் மூலம் காதலை வளர்த்துக் கொண்டனர்.
இருவருக்கும் அந்த நேரம் வந்தது.
2006-ம் ஆண்டு பிரிகிடி தனது முதல் கணவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தார்.
2007-ல் மேக்ரானுக்கும் பிரிகிடிக்கும் திருமணம் நடந்தது. அப்போது மேக்ரானுக்கு வயது 29. பிரிகிடியின் வயது 54.
ஒருவேளை, மேக்ரானின் செல்வாக்கு, எதிர்காலத்தில் அரசியலில் பெரிய பதவிக்கு வருவார் என்பதற்காக பிரிகிடி மேக்ரானை திருமணம் செய்து கொண்டாரா…?
இல்லை!
மேக்ரானை விட பிரிகிடி தான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். 2007-ல் இருவருக்கும் திருமணம் நடந்தபோது மேக்ரான் அரசியலில் ஈடுபடவே இல்லை. திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் 2012-ல் மேக்ரான் அரசியலுக்கு வருகிறார்.
2017-ல் மேக்ரான் பிரான்ஸ் நாட்டின் இளம் அதிபராக பதவியேற்றார். பிரிகிடி முதல் பெண்மணி ஆனார். பிரிகிடிக்கு பிறந்த 3 பிள்ளைகளை தவிர, மேக்ரானுக்கும் பிரிகிடிக்கும் குழந்தை பிறக்கவில்லை.
ஆக, தற்போது 48 வயதான மேக்ரான் மற்றும் 72 வயதான பிரிகிடி ஆகிய இருவரின் காதல் என்பது அழகு, வயது, செல்வாக்கு என எல்லாவற்றையும் தாண்டி ஒரு ஆழமான நம்பிக்கையை சார்ந்தது.
திருமணம் செய்துக் கொண்ட மனைவியை துரத்தி விட்ட ஒரு உலக தலைவரை போல் இல்லாமல் மிகுந்த வயது வித்தியாசம் இருந்தாலும், நாட்டிலேயே உயர்ந்த பதவியை அடைந்த பின்னரும் கூட தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணிற்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல் திருமண உறவை தொடரும் மேக்ரான் சிறந்த காதலருக்கு எடுத்துக்காட்டு ஆவார்.

காலையில் வந்த செய்தி…: கொண்டாட்டத்தில் மகளிர்…

Recent Posts