
மதுரையில் இந்து முன்னனி சார்பில் முருகன் மாநாடு இன்று நடைபெற்றது. முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் அறுபடை முருகன் கோயில்கள் போல் இங்கு வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாநாட்டில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டுள்ளார்.
அறுபடை முருகனை ஒரே இடத்தில் தரிசிக்க மக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்தார். காலை முதலே மாநாடு நடைபெறும் திடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி எடுத்தும் வருகை தந்தனர்.
