
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில், பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ. 3,000/- ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைத்தார்.,
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
இது போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் டொக்கன் கொடுத்து ரூ.3000-த்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
