
14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் கால் இறுதி சுற்று இன்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சையில் இந்திய அணி பெல்ஜியம் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
