கண்களை சுற்றி கருவளையமா: இதோ எளிய டிப்ஸ்…

கண்களை சுற்றி கருவளையம் என்பது இப்போதெல்லாம் ஒரு பொதுப் பிரச்சினை போல் பெரும்பாலோனருக்கு இருந்து வருகிறது.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது நைட் ஷிஃப்ட் வேலையில் இருந்தாலோ இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் கண்ணில் கருவளையம் வருவது இயல்பாகிவிட்டது.

இதற்கு தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த வாழைப்பழத்தின் தோல் – 1

கற்றாழை ஜெல்- 1 டீஸ்பூன்

செய்முறை:

கனிந்த வாழைப்பழத்தின் தோலை உரித்து அதன் உட்புறத்தில் படிந்திருக்கும் மெல்லிய பகுதியை ஸ்பூனால் சுரண்டி எடுக்கவும். இதைப் பின்னர் கற்றாழை ஜெல்லுடன் கலக்கவேண்டும். கற்றாழை ஜெல் என்பது வேறொன்றுமில்லை கற்றாழை மடலை அறுத்தால் உள்ளே ஜெல்லி போன்று கூழ் வடிவில் இருக்கும் சோறு தான் கற்றாழை ஜெல். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸியில் அடித்துக் கூழ் போலாக்கிக்கொண்டால் போதும் இப்போது கருவளையத்தில் தடவ பேஸ்ட் தயார்.

சிரமம் பாராமல் இந்த பேஸ்ட்டை காலையில் ஒருமுறையும் மாலையில் ஒரு முறையும் கருவளையம் இருக்கும் பகுதிகள் மற்றும் வறண்ட சருமம் தென்படும் இடங்களில் எல்லாம் தேய்த்து வந்தால் போதும் வெகு சீக்கிரத்திலே கருவளையப் பிரச்சினை உடனடியாகத் தீரும்.

நீருக்குள்அணு ஆயுதத்துடன் பாயும் டிரோன் சோதனை வெற்றி: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு…

பீகாரில் பிரதமர் மோடி பேச்சு : திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கண்டனம்..

Recent Posts