
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில்அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் வருடாந்திர பதவியேற்பு விழா 21 சூன் 2025 அன்று பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி மாநகர மேயர் முத்துதுரை கலந்து கொண்டார். பள்ளியின் தாளாளர் எஸ்.பி.குமரேசன், சாந்தி குமரேசன், பள்ளியின் துணைத் தாளாளர் கு. அருண்குமார்- பிரீத்தி அருண்குமார், பள்ளியின் முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேம சித்ரா அனைவரையும் சிறப்பு விருந்தினர் மற்றும் பெற்றோர்களை வரவேற்றனர்.

விழாவின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி மாணவமாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் தங்களது கடமைகளை நேர்மையுடன் பணியாற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பள்ளியின் தாளாளர் மற்றும் துணைத் தாளாளர் தங்கள் வாழ்த்துரையில் ”வண்ணமயமான கனவுகளுடன் பள்ளிக்கு வருபவர்களே! இன்று உங்களின் புதிய பயணம் தொடங்கும் தருணம், தலைவர்,துணைத் தலைவர் மற்றும் பிற பொறுப்பாளர்களே, மாணவர்களின் நம்பிக்கையை உங்கள் கைகளில் ஏந்தியுள்ளீர்கள், உங்களின் கைகளில் பள்ளியை முன்நின்று வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.. உங்கள் தோளில் சுகமான பொறுப்புகள் சுமத்தப்பட்டிருக்கிறது. சமூகப் பொறுப்புடன் பள்ளியின் வளர்ச்சியை உறுதி செய்யுங்கள், உங்கள் கடைமையை நேர்மையுடனும்,உண்மையுடனும் செய்யமாறு வலியுறுத்தினார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினர் எஸ்.முத்துதுரை தனது உரையில் “ வகுப்பறையில் அறிவையும்,விளையாட்டு மைதானத்தில் வீரத்தையும், கலைக்கூடத்தில் கற்பனையை வளருங்கள் இவையனைத்தும் உங்கள் எதிர்காலத்தை செழிக்க வைக்கும், உங்கள் ஒவ்வொரு செயலும், சமுதாயத்திற்கு ஒருபாடமாக அமையும், கனவுகள் மலரட்டும்” என்று மாணவர்கள் மனதில் சிந்தனை விதையைத் துாவினார்.

நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் பிரேமா சித்ரா தனது உரையில் விண்வெளியில் சிறகடிக்க துடிக்கும் பறவைகளிடம் “உங்களின் கனவுகள் மலரட்டும்,கடமைகள் தொடரட்டும் என்று மாணவர்களை வாழ்த்தியதோடு விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்
