
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் தமிழக அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.
ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு நடத்திய செலவு தொகையான 5 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் செலுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.