
கத்தார் நாட்டில் தோகா நகரில் நடைபெற்ற இந்தியா-ஏ அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். யுஏஇ அணி உடனான இந்த டி20 போட்டியில் இந்தியா-ஏ அணி 148 ரன்களில் வென்றது.
கத்தார் நாட்டில் ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்றுள்ளன.
