
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்றைய (22-01-2026) காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் காரைக்குடியில் திரைப்பட நகரம் அமைத்திடவும்,கல்வி வள்ளல் அழகப்பர் அவர்களின் பிறந்த தினம் ஏப்ரல்-06 ந் தேதியை அரசு விழாவாக அறிவித்திடவும், மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் ஆகியோருக்கு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அவர் விடுத்த கோரிக்கை முழுவிபரம்…
1 காரைக்குடி பகுதியில் கடந்த 80-ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத் தொழிலுடன் தொ்டர்புடைய நகரமாக திகழ்ந்து வருகிறது. இப் பகுதியில் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காரைக்குடியைச் சுற்றி பழமை வாய்ந்த பாராம்பரியமிக்க தமிழ் பண்பாட்டு கலைநயத்துடன் கூடிய செட்டிநாட்டு நகரத்தார்களின் வீடுகள்,நுாறு ஆண்டுகளுக்கு மேலான பாராம்பரிய கோயில்கள் பல உள்ளன. திரைப்பட நகரம் அமைந்தால் ஒரு நாளைக்கு சராசரியாக 1000 நபர்கள்வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள். படப்பிடிப்பு நடத்தி,டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகளுக்காக சென்னை செல்வதால் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே சென்னைதரமணியில் இயங்கி வரும் திரைப்பட நகரைப்போல் அமைப்பதற்கு அரசு நிலங்களும் இங்கு உள்ளதால் காரைக்குடியில் திரைப்பட நகரம் தொடங்கவும்.
- மாண்புமிகு அன்றைய முதல்வர்.டாக்டர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த தமிழ்தாய்க்கு சிறப்பான கோயில்தரணியிலே முதல் கோயில் காரைக்குடி நகரில் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட, தமிழ்தாய் கோயிலை புனரமைப்பு செய்து, கோயிலை சுற்றியும் சுற்றுப்புற மண்டபம் அமைக்கவும்.
3- கோடி கொடுத்த கொடைஞன் குடியிருக்க வீடும் கொடுத்த விழுத்தெய்வம் வள்ளல் அழகப்பர் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்வி நிறுவனங்களில் பள்ளி முதல் கல்லுாரி வரை நிறுவியவர். காரைக்குடியை கல்விக்“ குடியாக்கிய பெருமைக்கு சொந்தமான மறைந்த கல்வி வள்ளல் டாக்டர். அழகப்பர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல்-06-ம் தேதியை அரசு விழாவாக அறிவித்து அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அழகப்பரின் வரலாற்றை தமிழ்நாடு அரசு பாட புத்தகத்திலும் சேர்க்க வேண்டும்.
4- இந்திய சுதந்திர போராட்ட வீரர் “கப்பலோட்டிய தமிழன்” என்ற அடையாளத்துடன் திகழ்ந்த நாட்டிற்காக தனது வாழ்நாளை அர்பணித்த செக்கிழுத்த செம்மல்வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழை போற்றிடும் வகையில் காரைக்குடியில் அவரது முழு உருவச் சிலையுடன் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.
5.” கல்விக் கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், அவர் தமிழ்நாட்டில் இலவசக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி, கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் திறந்து கல்வியைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்று சென்ற கர்ம வீரர் கமராஜர் அவர்களின் முழு உருவச்சிலையை காரைக்குடியில் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்
